Skip to main content

Posts

Showing posts from September, 2013
யாகப் பூக்கள் ... அழாதேடா செல்லம் ! இன்னுமொரு முத்தம் ! அதோ கேளு மணிச் சத்தம் ! மத்தியானம்           வர்றேண்டா ! மடியில           வச்சிக்கிறேண்டா ! படிச்சி களைச்ச           பச்சப் புள்ளைக்கு ! பால் சோறு           தர்றேண்டா ! என்று சொன்ன அம்மா பேச்சைக் கேட்டு, நடையில் வேகம் தளர விட்டு, திரும்பி திரும்பி பார்த்து விட்டு, பிஞ்சுக் கையை அசைத்து விட்டு, உள்ளே போன பிள்ளை கண்டு, கடந்து சென்றால் கணத்த இதயத்தில் தாய் ! நேரம் மெல்லச் செல்லச் செல்ல, மூக்கில் புகையும் ஏற ஏற, இருமி இருமிக் களைத்த பிள்ளை, " ம்மா ... ம்மா ... " எங்கே நீ போனாயோ ? என்னைத்தான் விட்டு விட்டு ! கண்ணுந்தான் எரிச்சலாச்சே ! காரணந்தான் நெருப்பாச்சே ! கதறல்கள் காலியாச்சே ! கைப்பிடித்த தோழியுந்தான் கரித் தூசியாச்சே ! இதோ வர்றேன்னு போனவளே ! சொல்லக் கூட நேரமில்லை ! தீப்பசிக்கு தின்னு தீக்க, எந்தேகம் கிடைச்சிருச்சே ! எங்கேம்மா நீ போன .....
காலத்தை வென்றவள்  உன் விழிகள் கொய்த, என் கடந்த காலத்தைக் கொடுத்து விடு ! உன் வார்த்தைகள் விழுங்கிய , என் வருங்காலத்தைக் கொடுத்து விடு ! உன் சிரிப்பு சீரழித்துக் கொண்டிருக்கும், நிகழ்  காலத்தைக் கொடுத்து விடு ! எனது முக்காலத்தையும் வென்றவள் ! முழுங்கி விட்டு முனகல் வேறு, நான் முட்டாள் என்று ! எக்காலத்திலுமின்றி எக்காளமாயிருக்கிறேன், எப்பொழுதும் என்னெதிரில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் !
மனதை எழுப்பு  நினைவுகளைக் கொண்டு  நெஞ்சில் உழுதது போதும் ! விழிகளைக் கொண்டு  விடியும்வரை அழுதது போதும் ! நினைவுகளால்  நிரம்பும் மனம்  குமுறிக் குமுறிக்  கொப்பளிக்கும் ! வஞ்சொற்களை  வாங்கிய மனம், வதை பட்டு  வடு பட்டு  வாடி நிற்கும் ! நினைவுகள்  நெஞ்சின் நிழல்கள், நிஜமல்ல ! நினைவுகள்  செயல்களின்  சேமிப்புகள்  நிரந்தரமல்ல ! உருவமில்லா  வார்த்தைகளுக்கு  உயிர் கொடுத்து, உள்ளத்தில்  சேமித்து  - உன்னை  ஊனமாக்கியது போதும் ! எழுச்சிமிக்க  எண்ணகளால், மனதை  எழுப்புங்கள் ! ஏணி  போன்ற  எதிர் காலத்தை நம்  எதிரில் வைக்கும் ! எண்ணங்களை  உற்று நோக்கு ! உயிர் கொடு  உன்னை அறிவாய் ! உறுதி பிறக்கும் ! இன்னல் இல்லை  இறுதி வரை !
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
களை அட ! நன்றி கெட்டவனே ! நான் பெத்த மகனே ! என்னில் இருந்து எடுக்கப்பட்டவனே ! என்னையா ! எடுத்தெறிந்து விட்டுப் போகிறாய் ! முதியோர் இல்லத்தில் ! பதிலாக, இடுகாட்டில் சுட்டு பிடி சாம்பலாக்கியிருக்கலாம் ! இந்தக் கட்டையாவது வெந்திருக்கும் ! என் காலமாவது முடிந்திருக்கும் ! ஆனால், குடும்பத்திலிருந்து பிள்ளைகள் பிடுங்கி எறிந்த பெற்றவர்களின் கூட்டத்தில் , உன் தாயுள்ளம் ஒரு களையாக ஒரு நாளும் வாழாது ! நீ வீடு போய் சேருமுன், என் உயிர் ...
அறுவடை நாள்  அப்போதே எனக்குத் தெரியவில்லை ! உன் நெடுங்கூந்தல் நெருங்கி, கழுத்தினில் கவிழ்ந்து முகம் புதைக்கும் போது தெரியவில்லை எனக்கு ! உன் தசையாட்டத்தில், என் விசையிழந்து, சுகம் பெரும் பொழுது சுத்தமாய்த் தெரியவில்லை எனக்கு  ! ஆனால் இப்பொழுது திமிறிய  - என் தோள்களுக்கிடையில், திறந்த - என் மார்பில் எலும்புகள் மட்டும் கூடு கட்டி குவிந்த நிலையில் ! மேகத்தை இழந்த வானத்தைப் போல, தசையில்லா என் தேகத்தில், தளர்ந்த நரம்புகள் அறுந்து போன கயிறாய் ஆடிய நிலையில் ! கறுத்துச் சிவந்த - என் கண்கள், கவிழ்க்கப்பட்ட விளக்காய் ஒளியிழந்த நிலையில் ! இப்பொழுது புரிகிறது எனக்கு ! தாய் எனக்கு கொடுத்ததை தாரத்திடம் பகிராமல் தாசியிடம் பகிர்ந்ததற்க்கு ! இதோ ! என் ஆன்மாவின் அறுவடை நாள் அதிக தூரமில்லை !
ஜனிக்கும் ...  நீ செய்த கன்னிச் சேவைக்குக் கடவுள் கொடுத்த கருணைப் பரிசு, எனக்கு பத்து மாதச் சிறைவாசம் உன் கருச் சிறைக்குள் ! சிறைக்குள் நான் செய்த சித்ரவதை சகிக்க முடியவில்லை போலும்  உன்னால் ! சிந்தித்தாய் உன் மனதுக்குள் ! சிதைந்து விட்டேன் உன் கருவுக்குள் ! கூழ் கூழாக ! எல்லோர்க்கும் சந்ததித் தொட்டில் , எனக்கு மட்டும் - அது சவத் தொட்டிலா ? உனக்கென்ன ஒருமுறை சிறுநீர் கழிப்பது போல, என் ஒரு ஜென்மத்தைக் கழித்துவிட்டாய் காசுக்காக ! காசுதான் உனக்கு கடவுளென்றால், கைககளை நம்பி உழை ! கருப்பையை மூலதனமாக்காதே ! இது  உன் மனம் இரங்கச் சொல்லும் மன்றாட்டு அல்ல ! உன் மடியில் மலர்ந்த மழலையின் மரண ஓலம் ! நொடிக்கு நொடி ஜனிக்கும் - உன் நினைவுகளில் ...
புதிய வியாபாரம்  நீதித் துறையின் நித்திரையில், நிதித் துறையின் நீண்ட கனவுகள் வருவதால், இனி வரும் வழக்குகளுக்கெல்லாம்  விசாரனையோடு விடுதலை ...
நினைவுகளுக்காக ... என் நெஞ்சுக்குழியை வானமாய்த் தோண்டி, உன் சுடும் பார்வைகளை கடும் பாறைகளாய் இட்டு, என் கண்ணீரைத் தண்ணீராய் நிரப்பி உறுதியாய், என் உள்ளத்தில் எழுந்ததடி , உன் கல்லறையின் அஸ்திவாரம் ! நான் கண்ட கனவுகளை நான்கு பக்கச் சுவர்களாக்கி, கறுப்பு உனக்கு பிடிக்குமென்பதால் ! இரவையேத் தரையாக்கி, தென்றலையே திரைச் சீலைகளாக்கி இருக்கிறேன் ! என் கூரிய புருவத்தையே கூரையாக்கி, என் விழிகளையே விளக்குகளாக்கி இருக்கிறேன் ! உன் விழிகளின் வெளிச்சத்தில், என் இதயத்தைக் கொளுத்தியிருக்கிறேன், நறுமணத்திற்காக ! முகப்பில் உன் உருவத்தை, என் உதிரத்தால் தீட்டியிருக்கிறேன் ! என் உயிரையே அதற்குக் காவலாக்கியிருக்கிறேன் ! என் மரணம் வரை பயணிக்கும், உன் நினைவுகளின் நீண்ட உறக்கத்திற்கு, நான் எழுப்பிய கல்லறை இது !
தென்றலே தேய்ந்து போன                     நிலவை, தேடிப் போன                    தென்றலே ! இரவு காதலிக்கும்                      நிலவை  - நீ உளவு பார்க்கச்                     செல்வதேன் !
பெண்மை  உன் பெண்மையின் மென்மை கண்டு தானே, உன்னை மணம் முடித்தேன் ! இப்போது மட்டும் வன்மையை வரவேற்கிறாயே ! காதலனாய் இருந்த போது, கணவனாய்ப் போற்றினாய் ! கணவனாய் இருக்கும் போது, கடமைக்குக் காலந் தள்ளுகிறாய் ! மனைவி என்ற மந்திரச் சொல்லிலிருந்து , என்னை நீ மீட்டுவதில் , எனக்கு மகிழ்ச்சியில்லை ! மறுபடியும் நீ என் காதலியாகிவிடு !
நெருப்பு என் கண்களால் நீரூற்றியும் அணையவில்லை ! உன் கண்களால் என் நெஞ்சில் நீ கொளுத்திய நெருப்பு !
மரணத்தின் அழகு ரோஜாச் செடிக் குடும்பத்தில், இறப்பைப் பிறப்பித்து விட்டு , உதிர்ந்து விழும் உன் கூந்தல் தேருக்கு மட்டும் மலர் அலங்காரமா ?
நீதான்னு ... காஞ்சிபுரம் கருவாச்சி,           பார்த்து ரொம்ப நாளாச்சி, கோபப்படும் குட்டச்சி,           கோவிச்சிப் போனா என்னாச்சி, நானும் இனி உங்கட்சி,           வேணாமடி அழுகாச்சி, கண்ண உருட்டி காமிச்சி - நீ           சொன்ன காதல் என்னாச்சி, நல்ல காலம் வந்தாச்சி,           நாலு காசும் பார்த்தாச்சி, பந்தக் காலும் போட்டாச்சி,           பத்துப் பேரும் வந்தாச்சி, ஊர் மயங்கி நின்னுருச்சி,           மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி, கையி ரெண்டும் கோர்த்தாச்சி,           கழுத்துல தாலி ஏறிடுச்சி, படுக்கையும் விரிச்சாச்சி,           பன்னீரும் தெளிச்சாச்சி, அதுக்குள்ள ! ...
கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
காஸ்ட்லி காதலி  தித்திப்பாய் திண்ணத் தினக் கூலியாய் தினம் ஒரு காதலி !
பலி ... அண்ணனும்        அழிக்கப்பட்டான் ! தம்பியும் தாறுமாறாய்க் கிழித்தெறியப்பட்டான் ! தங்கையின் முடிவும் பிடி சாம்பலாய் காற்றில் கரைந்தது ! குழந்தைகளோ ! குற்றுயிரும் குறை உயிருமாய் குதறப் பட்டார்கள் ... மனைவியோ ! மல்லாந்த நிலையில் மரணத்தைப் பிரசவத்திருந்தாள் ... தாய் தந்தையரோ ! தடுமாற்றத்தில் தன்னிலை மறந்து கிடந்தார்கள் ... இந்திய தேசத்தின் இன வெறியில் இன்றைய பலி என் குடும்பம் ! நாளை ...
கருவறைக் கனவுகள் அம்மா ! அம்மா ! உன் கருவிலிருந்து உள்ளூரக் கதறும் என் குரல், உன் காதில் விழவில்லையோ ! அம்மா ! உன் தொப்புள் கொடி முடிச்சின் உறுதியில், இவ்வுலகை முதன் முதலாக சுவாசிக்கும் வெற்றிக் களிப்பில் கை கால்களை அசைத்து, காற்றினை அடிக்க ஆசை ! அம்மா ! உன் வயிற்றினுள் வளரும் போது, உன்னை எத்தனை முறை எட்டி உதைத்து முட்டித் தள்ளியிருப்பேன் ! அத்தனைக்கும் சேர்த்து மொத்தமாக உன் மடியில் அழுது  தீர்க்க ஆசை ! அம்மா ! என்னைத்  தொட்டுப் பார்க்கும், உன் விரல்களை விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ள ஆசை ! என் உடல் வளர்க்க உன் மார்பில் உதிரம் உறிஞ்ச ஆசை ! இப்படி எத்தனையோ ஆசைகள், அம்மா ! உன் கருவில் நான் வளரும் போதே ! ஆனால் ... மகனை எதிர்பார்த்த உனக்கு மகளாய் நான் பிறந்ததால் மனித வாழ்வை எனக்கு மறுத்துவிட்டாயா  ?  அம்மா ! கருவில் எனக்கு உரு கொடுத்து, உயிர் கொடுத்து, உள்ளம் கொடுத்து, உணர்வுகள் கொடுத்து, மறுபடியும் இந்த மண்ணிற்கே உரமாய் கொடுத்து விட்டாயே ! அம்மா ! பத்து மாதம் பாடுகள் பல பட்டு பெற்றெடுத்த ...
மாசானவள் ஈழத்தில் பிறந்த  ஈனப் பிறவி நான் ! தமிழர் பிரச்சனையில் தாள அறுக்கப்பட்டு  தவிக்கும் குழந்தையோடு  அகதிப் போர்வைக்குள்  அழுத்தப்பட்டு இந்தச்  சகதிக்குள் தள்ளப் பட்டவள் ! வேளைக்கு ஒரு  சேலை அணியவோ, கழுத்து நிறைய  கண் கூசும் நகைகள்  அணியவோ, உறவுகளைத் துறந்த  ஆடம்பர வாழ்வில்  ஆனந்தம் காணவோ, இதற்குள் விழவில்லை நான் ! அகதிப் பொறுப்பாளனின்  அகம் பாவத்தினால், பருந்து  பறித்துச் சென்ற  கோழி குஞ்சு போல், பறிக்கப்பட்ட என் குழந்தை, பயமுறுத்தப் பட்டது, அது  கொன்று விடப்படுமென்று ! வாழ்வு எனக்கு  எவ்வளவு தூரமோ  அவ்வளவு தூரம் தான்  என் மரணத்திற்கும்  என்று நினைத்துக் கொண்டேன்  பல முறை முயற்சித்தும்  முடிவில் மரணம்  எனக்கு மறுக்கப்பட்ட ஒன்று என்று ! கண்ணுக்கு எட்டாத தூரத்தில்  காக்கப் படுகிறது என்  குழந்தையென்று அவன் செய்த சத்தியங்களில்  என் சரித்திரம் மாறுகிறது ! மாத வாடகையானேன், நாளுக...
அப்பா நன்றி அப்பா ! எப்போதாவது  யாரிடமாவது  அறிமுகப்படுத்தும் போது மட்டும்  என்னோடு  பேசுவதற்கு ... நன்றி அப்பா ! முதன் முதலாய்  பிறந்ததால்  மூத்தவள் என்று  முடிசூட்டி, என்னை  மூலையில்  முடக்கி வைத்ததற்கு ... நன்றி அப்பா ! இளையவள் பிறந்த பின்பு  இல்லத்தில் ஏற்றம்  என்று  என் தங்கைக்கு மட்டும்  சிவப்புக் கம்பளம்  விரித்ததற்கு ... நன்றி அப்பா ! முழுமையான பெண்ணாக  நான் மலரும் போது  முனகிய படியே என்  கனவுகளுக்கு  முற்றுப்புள்ளி வைத்ததற்கு ... ஆனால் அப்பா ! எனக்குள் சில  ஆதங்கம் ... சரியான நேரத்தில்  முறையாக எனக்கு  போலியோ  போடப்பட்டிருந்தால் ... கைகளை ஊன்றி  உடலை இழுத்து  இழுத்து  இடம்பெயரும் , நிலை எனக்கு  இல்லாமல் போயிருந்தால் ... என்  ஊனம் கண்டு  உள்ளத்தில் எரிந்து  உங்கள் உதடுகள், என்  உதிரம் உறிஞ்சும் வார்த்தைகள்  உதிர்க்காமல்  ...
இன்னொரு அறிமுகம் அட ! எங்கேயோ பார்த்த முகம்  இவனென்று  எண்ணத் தோன்றுகிறதா ? எப்போதோ  சுவைத்த இதயத்தின்  இனிமை  இப்போது உன்  நினைவில் வருகின்றதா ? உன்  பத்தினிச் சிரிப்பில்  பற்றி எரிந்து, சத்தியமாய்ச்  சாம்பலாகிப் போன, என்  இதயத் துகள்களை  நுகர முடிகிறதா ? கள்ளிப்பால் குடித்த குழந்தை போல், உன்  காதலிப்பால்  கரைந்த, என்  உயிரின் கதறல்  கேட்கிறதா ? நான் தானடி! நீ சிதறிய  பார்வையில் சிக்கியவர்களில் சீனியர் நான் ! என் வாழ்க்கை உன்னோடு என்று, நீ உளறிய வார்த்தைகளில் உருகியவன் நான் ! உன் ஞாபகங்களில் ஞானியானவன் நான் ! பொய்களைக் கடந்து மெய்களை மறந்து எதையும் நம்ப மறுப்பவன் நான் ! முன்னாளில் உன் காதலனாய், இந்நாளில், என் முகவரி தொலைத்தவனாய் ... அட ! எங்கேயோ பார்த்த முகம் இவனென்று  இப்போது தெரிகிறதா ?
பெண் மனம் எவனையும் பார்த்து  எதுவும் தோன்றவில்லை  இதுவரை எனக்கு ! உங்களைப் பார்த்த  பின்பு தான்  ஆசை என்பதற்கு  அர்த்தம் புரிந்தது ! நீ பேசும்  பொழுது தான்  ஸ்நேகம்  விளங்கியது ! நீ  பழகும் பொழுதுதான்  பரிவு புலப்பட்டது ! நீ  விலகும் போது  தான்  மீண்டும் மீண்டும்  வேண்டும்  என்றிருந்தது ! நீ  நெருங்கும் போது  தான்  வெட்கம் பிறந்தது ! நீ  அழைப்பிதழ் தரும் போது  தான்  என் கனவுகளில்  கலைந்து  சென்றாய்  நினைவுகளில்  நிலைத்து நின்றாய் ! என்  இருபது வருட  ஒழுக்கம், என்னை விட்டு  எட்டிச் சென்று, கேலி செய்கிறது ! உணர்வுச் சிறைக்குள்  நான்  உயிர் விடும் போது !  
சிரிக்கிறேன் கொஞ்ச நாள்  பழக்கம்  கொண்டு வந்த  வழக்கம்  எதிரே பார்த்தால்  யதார்த்தமாய்  சிரிப்போமென்று ! எத்தனையோ முறை  உன் எதிரில் நான்  உன்னைக்  கடக்கும் பொழுது  சிரித்தாய் , நானும் சிரித்திருக்கிறேன் ! கை அசைத்தாய், நானும்  கை அசைத்திருக்கிறேன் ! 'நில்' என்று  சைகை செய்வாய்  நானும்  நின்றிருக்கிறேன் ! 'பேசு' என்று  கண்களால் கெஞ்சுவாய் ! நானும்  கொலையுண்டிருக்கிறேன் ! "என் இறுதிவரை  என் கண்களுக்குள்  நீ தான்  நிறைந்திருக்க வேண்டும் " என்றாய் ! பயந்தேன், பதறினேன், பதில் சொல்லி  அவகாசம் கேட்டேன் ! உன் பூமுகம் கண்ணீர்ப்  பொய்கையில்  மூழ்குவது  சகிக்காமல்  கிளம்பினேன் ! மறுநாள்  இதோ தூரத்திலே  என்னைப்  பார்த்து விட்டாய் ! என்னுள் நீ  உதிர்த்த  உணர்வுகளுக்கு எல்லாம்  "உயிர் கொடு" என்று  உன்னிடம்  கேட்க வந்தேன் ! ஆன...
நன்றி என் கல்லறைக்கு  வழிகாட்டிய, உன் விழிகளுக்கு  - நன்றி ! சின்னஞ் சிறிய வார்த்தையால்  நெஞ்சில்  சிவப்பு நீர்  வெளி நடப்பு செய்யாமல்  சிலுவை அறைந்தாய் - நன்றி ! உணர்வுகளைச்  சாகடித்து என்  உயிருக்குள் கருவானாய் - நன்றி ! உள்ளம் முழுக்க  பள்ளம் தோண்டி அமர்ந்து  என் கண் முன்னே  கலைந்து போனாய் - நன்றி ! காத்திருந்து உனைக்  கண்ட கண்கள்  கண்ணீரால் கழுவிக்  கரைத்தாய் - நன்றி ! உன் வளையொலியில்  என் வாழ்வை ஒளித்தாய் - நன்றி ! எழுச்சிமிக்க இளைஞன் நான் என எனக்குள் நீ காட்டிய பாதைக்கு - நன்றி ! ஒரே ஒரு முறை மட்டும் உன்னைச் சந்திப்பேன் ! உயர்ந்த பிறகு நீ உணர்த்திய உயரத்தை நான் அடைந்த பிறகு - நன்றி !
நிச்சயமாய் நீயும் ஒரு ... நிச்சயமாய் எனக்கு  நீயும் ஒரு ... எப்போதோ என்னைப்  பார்த்தாய் ! அப்போதே உன்னை  மறைத்தாய் ! பார்வைகளால் எனக்குள்  பயணித்தாய் ! வார்த்தைகளால் என் வயது  குறைத்தாய் ! என்  சோகங்கங்களில் நீ அழுதாய் ! என் சுகங்களை மட்டுமே நீ  தொழுதாய் ! தொலைபேசி எண்களில்   தொலைந்தாய் ! தொல்லை கொடுத்தாலும், என்னை  மன்னித்தாய் ! சாலையோர சந்திப்பில்  சாதித்தாய் ! மாலையிலும் உன் பணி  தொடர்ந்தாய் ! என் நினைவையே உன்  உணவாய் எடுத்தாய் ! அதனையே எனக்கும்  திரும்பக் கொடுத்தாய் ! என்றும் உன் மடியில்  நானோர் குழந்தையாய் ! ஆதலால்  நிச்சயம் எனக்கு  நீயும் ஓர் தாய் ! அசைவக்காரன்  தான் நான்  அதற்காக  என் பசிக்கு  உன் தசைகளை  வேட்டையாடுபவன் அல்ல ! உலர்ந்த நம்பிக்கையில்  உறவுகள் ஒட்டாது  உணர்வுகளும் புரியாது ! ஆனால்  ஒன்று மட்டும் உறுதி ! இறுதி என்பது  இல்லை இனி என்  இதயத்தில் உன்  நினைவுகளுக்க...
கட்டிப் போடு  உன்      நாவைக்  கட்டிப் போடு ! உணர்வுகளையும்,     உன்னையும் சுமக்கும்  என் நெஞ்சில், நீ      உமிழ்ந்த வார்த்தைகள்  உதிரம் கொட்டச் செய்கிறது ! என்      ஆழ்மனதில்  நீ  அடித்த ஆணி வார்த்தைகள்,     தூக்கத்தின் ஆழத்தையும்  துக்கப் படுத்துகின்றன ! உன்      நாவைக் கட்டிப் போடு ! உன்  ஒவ்வொரு பார்வையிலும்  நான் பிறக்கிறேன் ! உன் ஒவ்வொரு வார்த்தையிலும்  நான் இருக்கிறேன் ! எனக்கு  பிறக்க மட்டுமே ஆசை  சிறப்பாய் உனக்காக மட்டும் ! உன்  வார்த்தைகளைத் தாங்க  வலுவில்லை  என் மனதில், ஆதலால் உன்  மௌனத்தின் கூக்குரல்  ஒலிக்கும் எப்போதும் !
நன்றிக் கடன்  நான் சுவாசித்த  என் பெண் மனமே ! உன்னால்  வஞ்சிக்கப்பட்ட இதயம்  ஒன்று  வாழத் துடிக்கிறது ! உன்னால்  அனாதையாக்கப்பட்ட என்  ஆழ்மனம் - இன்று  ஆளத் துடிக்கிறது ! உன்னால்  கைவிடப்பட்ட என்  கனவுகள் - இன்று  முற்றுகையிடப்படுகிறது ! உன்னால்  உழன்று கொண்டிருந்த  என் வாழ்க்கைச் சக்கரம்  வெற்றி ஓட்டத்திற்கான  வரம் பெற்றிருக்கிறது ! எப்படி தெரியுமா ? எனக்குத் திருமணம்  அய்யோ பாவம்  யார் அந்த மங்கை ? என் மனதிற்கு  ஈடு செய்வாளா ? ஏனெனில் அவள்  எனக்காய்  தினமும் அழ வேண்டும் ! எனக்காய்  தினமும் குமுற வேண்டும் ! எனக்காய்  தினமும் வருந்த வேண்டும் ! எனக்காய்  தினமும் என்னோடு  சண்டையிட வேண்டும் ! எனக்காய்  தினமும் என்னால்  பித்துப் பிடித்தவள் போல்  சத்தியமாக மாற வேண்டும் ! எனக்காய்  எப்போதும் என்னை  எதிர் பார்த்திருக்க வேண்டும் ! எனக்காய்  மனத...
தியாகி  தன் உடலுக்குள் உடலாக வளர்த்து தன்னிகரற்ற உலகுக்கு ஒளியாய் அளித்து தன் ரத்தத்தையே பாலாகப்  பிரித்து , தான் உண்டாலும் உண்ணாமற் போனாலும், தன் பிள்ளைக்கென்று ஒரு பிடி எடுத்து, நல்ல குணங்களையே வளர்த்து தன் மடியை தலையணையாய் வைத்து, தன் மூலம் ஓர் உயர்ந்த நிலையைப் பார்த்து, தனியே தவிக்கும் தாயும் ஓர் தியாகி தானே ! இளமையில் இணைந்து இன்னலோ, இன்பமோ இறுதிவரை தொடர்ந்து, இல்லறத்தில் நிலைத்து, இனிய தலைமுறை வளர்த்து, ஈன்ற பெற்றோரை துறந்து, சேர்ந்தக் குடும்பத்தைச் செழிக்கச் செய்யும் மனைவியும் தியாகி தானே ! தன் மனதை மட்டும் பாராமல் பெண் மனதை பெரிதாக மதித்து, உடல் அழகு பாராமல் ஊனமுற்ற இளம்பெண்களை - வாழ்வில் ஊன்று கோலாய்த் தாங்கும் உன்னத இளைஞர்களும் தியாகிகள் தானே ! வீட்டுக் கதவைத் தட்டி ஓட்டுக் கேட்டு வந்தவனிடம் நாக்குறுதி இல்லாதவனின் வாக்குறுதிகளை நம்பி முத்திரையிட்ட பின்னர் நித்திரை கெட்டுத் தவிக்கும் ஜனங்களும் ஒருவிதத்தில் தியாகிகள் தானே ! விளைவுகளையும் எதிர்பாராமல், விருதுகளையும் எதிர்பாராமல், வித்தியாசமான சாதனைகளை விடியல்தோறும் படைக்கும் ...
விரைவில் ... உன்னால் சுழற்றி எறியப்பட்ட குப்பையடி நான் ! இந்தக் குப்பையும் கோபுரம் அடையும் காலம் வரும் ! நீ அன்னாந்து பார்க்கும் உயரத்தில்  நான் இருப்பேன் ! உன் அருகில் நான் இருக்கமாட்டேன் , என்னுயிரில் நீ இருப்பதால் !
அஞ்சலி  [ காதலர் தினக் கவிதை ] என் இதயத்தை  எனக்கு அறிமுகப்படுத்தியவனளுக்கு, ஏங்கிக் கிடந்த  என் எண்ணங்களை  எழுத்துச் சிதறல்கள் கொண்டு  ஏணி அமைத்திருக்கிறேன் ! முடிந்தால்  ஏறி வந்து  என்னைப் புரிந்து கொள் ! மழைத்துளிக்குப் பின்  மண் வாசனை  மலருக்குப் பின்  மகரந்த வாசனை, உன் பின்  என் யோசனை  என்றாவது வந்திருக்கிறதா ? நீ ஏன்  வந்தாய் ? என் பின்  கரிசல் காடு காத்திருக்கும்  கன மழைக்கு, கயவன் நான்  காத்திருக்கிறேனா ? என்றாவது உனக்கு ! நீ ஏன்  காத்திருந்தாய் எனக்கு ! உன் பரிவு  உன் பாசம்  உன் காத்திருப்புகள்  உன் எதிர்பார்ப்புகள்  உன் சமாளிப்புகள்  உன்னுடைய  சின்னச் சின்னப்  பொய்கள், சின்னச் சின்ன உரிமை மீறல்கள், சின்னச் சின்ன சேட்டைகள், என்று எல்லாம் சேர்ந்து, உனக்காகவே  உருவாக்கப்பட்டவன் நான்  என்ற நினைப்பை  எனக்குள் ஏனடி ஊட்டினாய் ? என் இதயம்  இப்போது, உன்...
நாளை  சிந்தனையைச்  சீரழிக்கும்  சிரிப்புக்குச் சொந்தக்காரி ! வெண்கடலில்  கரு முத்தைக்  காட்டி மிரட்டும்  கெட்டிக்காரி ! கனலாய் வார்த்தை  உமிழ்ந்து, என்  கண்ணீரில் தாகம்  தீர்க்கும் உளவுக்காரி ! என்  ஆன்மாவை  அமைதியாய்  உறிஞ்சிய உரிமைக்காரி ! வாழ்வில்  சூரியனாய்  எழுந்தவனை  சருகாக்கி சங்கடப்படுத்திய  சாகசக்காரி ! என் இதயத்தை  இரு கூறாக்கி, நீ  இட்ட நெருப்பு  இனி எரியும்  நாளைமுதல் உனக்குள் !
அன்புடன் ... இன்று மட்டும்  ஒரு நிமிடம்  உன்னோடு  வாழ்ந்து விடுகிறேன் ! ஏனெனில்  நாளை என்  இதயத்தில், உன்  நினைவுகளுக்கு  இறுதி ஊர்வலம் !
மீண்டும் நான்  உன் வானில்  நான் நிலவென நினைத்தேன் ! அது நிஜமல்ல என்பதைப் புரிந்து கொண்டேன் ! நிலவாய் நிலைத்திருக்க விரும்பினேன் ! நீயோ மேகமாய் என்னை அலைக்கழித்தாய் ! மழையாய் கரைந்து மண்ணோடு மண்ணாகிறேன் ! மீண்டும் மரமாய் நிமிர்ந்து உன்னைக் காண !
நெஞ்சினிலே  பத்து மாதம் கருவுக்குள்  என்னைப் புதைந்து, இந்த  பாரதத் தாய்க்கு, பத்திரமாக என்னை  அறிமுகப்படுத்திய என் தாயே ! பதறாதே ! இதோ இன்னும்  இரு தினங்களில் உன்னுடன் ! எல்லை வீரன் இவன், தொல்லைகள் இருக்கும் எனத்  தெரிந்தும்  கவலைகளின்றி எனை மணந்து, நாள்தோறும் தெருமுனையில், என்  வரவுக்காக காத்திருக்கும்  - உன்  விதி முனைகளுக்கு  விருந்து வைக்க, அன்பே ! இன்னும்  இரு தினங்கள் மட்டுமே ! என் முகம் பாராமலே  வளரும் என் மகனே ! - உன்  பிஞ்சுப் பாதங்கள் நடக்க, என்  நெஞ்சினையே கொண்டு வருகிறேன்  இன்னும் இரு தினங்களில் ! இவ்வாறு  இமைய மலைச் சாரலில் கடுங்குளிரில் காற்றையும் கஷ்டமாக சுவாசித்துக் கொண்டு தன் கண்களுக்குள் எல்லையைக் காத்து நின்ற வீரன் ஒருவனின், காய்ந்து போன மனம் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், ஊடுருவல் என்ற பெயரில் ஓடி வந்த ஒருவனின் தோட்டாக்களைத் தன் மார்பில் புதைத்துக் கொண்டு முதன் முதலில் எல்லையை மிதித்தவனை, தன் கத்தி வீசி ,  அவன்...
ஆளப்பிறந்தவன்  [ எனக்கும், கடலுக்கும் நடந்த உரையாடல் இது ] நெடுநாளாய் வீழ்ந்து கிடந்த  நீர்ப்பிணம் ஒன்றின்  நீண்ட மணல் வெளியில், நெஞ்சம் சுமந்த  நினைவுகளை எல்லாம், நிழற்படமாய்  மனதுக்குள் சுவாசித்துக்  கொண்டிருந்தேன் ! மேகத்தில் துளியில்லை, வானம் முழங்கவில்லை, வெள்ளிக் கம்பிகள்  திரிக்கப்படவில்லை, குளிர் காற்றும் என்னைக்  குடிக்கவில்லை, ஆனாலும்  நனைகிறேன் நான் ! திரும்பிப் பார்த்தேன், திகைத்தேன் ! என் உயரத்திற்கு  நீர் எழும்பி, என்னை நனைத்துச்  சிரித்தபடி கேட்டது, 'என்னை யார் ?' - என்று   'அகிலம் ஆளப்பிறந்தவன்  நான்' எனக்கூறி, என் அடி தொழுது  நிற்கும் நீ யார் ? எனக் கேட்டேன் ! என்னிடம்  விடை எதிர்பார்த்திருந்த  நீர்ப்பிணம், என்  எதிர் வினாவினால்  எரிச்சலுற்றது ! நீர் வரிசைகளால்  என்னை அடித்தது ! இரைச்சலுடன் உயரே எழுந்து  என்மேல் மோதி வீழ்ந்தது ! வீழ்ச்சியைத் தன் பயத்தால் மறைத்து, "நான் ஓர் நீர்ப்புரட...
ஜீவன்  [ பெண் மனம் ஒன்று தனது வாழ்க்கையின் ஓட்டங்களை தானே சொல்வது மாதிரியான வடிவம் தான் இந்த ஜீவன் ] நெஞ்சில் களிப்போடு, கையில் இனிப்போடு, விழிகளில் ஆசையோடு, காத்திருந்த நெஞ்சம்  கல்லாகிப் போனது, பெண் பிள்ளையாக  நான் பிறந்ததால் ! காற்றடித்தால்  காணாமற் போகும்  களிமண் குடிசையில், கல்வியின் வாசம்  நுழைவதற்குக் காசுக்கு  எங்கே போவது ? சில வண்ணச் சீருடையிட்டு, சின்னப் பாதங்களில் உறையிட்டு, சின்னஞ்சிறிய மலர்கள்  சிங்காரமாய் பள்ளி செல்கையில்   சிந்திய கண்ணீரைத் தொட்டு  சிரித்தபடி செல்லும் என் மனம் ! சில்லெனும் குளிரோடையில்  சித்திரமாய் தாமரை மொட்டு  சிரித்து நின்றால்தான், கதிரவனும்  சிறப்பாய்த் தன்  செங்கதிர்களை வீசுவான், ஆம் ! வளர்ந்து வரும் - என்  வயதுகளில் நான்  வளர்பிறையாகி  வாட்டும் பௌர்ணமியாகினேன் ! கல்விச் சாலைகளுக்கும், கடமைகளைச் செய்வதற்கும், கடந்து செல்லும்  காளையர்களின்  கண்ணாடி பட்டுக்  களைத்துப் ப...
எங்களால் ... உறங்காத விழிகளால்  ஊமை மொழி பேசி, இரு  உள்ளங்கள் கசிந்துருகி, உண்மையான  நேசம்  உறுதிப்படும் போது  ஊனமாக்கப்படுகிறது  ஜாதி ! தாயை மறந்து  தாரத்தை மறந்து  தன் பிள்ளையை மறந்து  தன்னலத்தையும்  மறந்து  தாய்நாடு காக்க  தளராத  உள்ளங்கள்  இணையும் போது  இறந்து விடுகிறது ஜாதி ! குறிஞ்சி மலராய் பூத்து  நெஞ்சு  நெகிழ  கொஞ்சி விளையாடும்  பிஞ்சு உள்ளங்கள்  ஒன்றினையும் போது  கொன்று அழிக்கப்படுகிறது ஜாதி ! ஊமையாய் இருந்து  உயிர் பறித்தும்,  நாவில் நடனமாடி  நாட்டை தொலைத்தும், கையில் ஒரு கருவியாகி  காண்போரைக் கொன்றும், யுத்தங்கள் பல கண்டு  ரத்தக்கறை படிந்த ஜாதி, இமையத்துக்கப்பால்  எடுத்தெறியப்படும்  இனி எங்களால் !  
அகராதி  எத்தனையோ  மொழி அகராதி  இருந்தாலும் , உன்  விழி அகராதிக்கு  ஈடாகுமா ?