Skip to main content

தியாகி 


தன் உடலுக்குள் உடலாக வளர்த்து
தன்னிகரற்ற உலகுக்கு ஒளியாய் அளித்து
தன் ரத்தத்தையே பாலாகப்  பிரித்து ,
தான் உண்டாலும் உண்ணாமற் போனாலும்,
தன் பிள்ளைக்கென்று ஒரு பிடி எடுத்து,
நல்ல குணங்களையே வளர்த்து
தன் மடியை தலையணையாய் வைத்து,
தன் மூலம் ஓர் உயர்ந்த நிலையைப் பார்த்து,
தனியே தவிக்கும் தாயும் ஓர்
தியாகி தானே !

இளமையில் இணைந்து
இன்னலோ, இன்பமோ
இறுதிவரை தொடர்ந்து,
இல்லறத்தில் நிலைத்து,
இனிய தலைமுறை வளர்த்து,
ஈன்ற பெற்றோரை துறந்து,
சேர்ந்தக் குடும்பத்தைச் செழிக்கச்
செய்யும் மனைவியும்
தியாகி தானே !

தன் மனதை மட்டும் பாராமல்
பெண் மனதை பெரிதாக மதித்து,
உடல் அழகு பாராமல்
ஊனமுற்ற இளம்பெண்களை - வாழ்வில்
ஊன்று கோலாய்த் தாங்கும்
உன்னத இளைஞர்களும்
தியாகிகள் தானே !

வீட்டுக் கதவைத் தட்டி
ஓட்டுக் கேட்டு வந்தவனிடம்
நாக்குறுதி இல்லாதவனின்
வாக்குறுதிகளை நம்பி
முத்திரையிட்ட பின்னர்
நித்திரை கெட்டுத் தவிக்கும்
ஜனங்களும் ஒருவிதத்தில்
தியாகிகள் தானே !

விளைவுகளையும் எதிர்பாராமல்,
விருதுகளையும் எதிர்பாராமல்,
வித்தியாசமான சாதனைகளை
விடியல்தோறும் படைக்கும்
விஞ்ஞானிகளும் தியாகிகள் தானே !

தினந்தோறும் தியாகிகள்
திரைமறைவில் இருக்கின்றனர் !
தென்றலைப் பூட்ட பொருளுண்டா ?
மனம் மறைக்கும் வழியுண்டா ?
தியாகம் திருடத்தான் ஆளுண்டா ?

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !