Skip to main content

நீங்காதவன் 


உருவங்களை
ஊடுருவிச் செல்லும்
வெள்ளிச்சத்தில்
பிறந்தவன்
நான் !

உணவு, உடை,
உணர்வு, உறக்கம்
உறைவிட மற்றவன்
நான் !

காடு, மலை
கடந்தாலும்
களைப்பில்லாதவன்
நான் !

வளர்ந்து தேயும்
வல்லமை பெற்றவன்
நான் !

ஊர் முழுக்க
ஊர்ந்து செல்லும்
ஊனமில்லாதவன்
நான் !

உலகம் இயங்கிய
நாள்முதல்
உயிரோடிருப்பவன்
நான் !

மனித மனங்களில்
மறைந்து கிடக்கும்
மனசாட்சியின்
மறுபிறவி
நான் !

எதனை விட்டும்
நீங்காதிருப்பவன்
நான் !

என்
பெயர்
நிழல் என்பதால் ...

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !