தினமும்
அழகாய் வந்தாய்அருகில் நின்றாய் !
கண்களால் கொன்றாய்
காதலால் தின்றாய் !
பூவெனத் துளிர்த்தாய்
உள்ளத்தில் உயிர்த்தாய் !
சொல்லிசை மொழிந்தாய்
சொல்லாமல் கரைந்தாய் !
வாவென அழைத்தாய்
வந்ததும் மறைந்தாய்
மறைவில் சிரித்தாய் !
உன்
பிம்பம் மேகமாய் ...
என்
கண்ணில் நீ மழையாய் !
சொல்லத் துடிக்குது மனமே !
தரிசனம் அருள்வாய்
தினமே !
Comments
Post a Comment