Skip to main content

Posts

செம்மொழி  என் தாய்மொழி ! அது என்றும் செம்மொழி ! உன் செக்கச் சிவந்த உதட்டில் உயிர்க்கும் மொழி ! என் தாய்மொழி ! என்றும் செம்மொழி !
Recent posts
அர்த்தமென்ன ? உன் உணர்வுகளோடும் உதிரத்தோடும் கலந்த என்னை , உற்ற தோழி சொன்னாலென்று , உள்ளத்திலிருந்து எடுத்தெறிந்து விட்டாய்  என்னை ... எதிரெதிரேப் பார்த்தாலும் , உன் பத்ரகாளிப்  பார்வையில் பஸ்பமாகிறேன் நான் ! கண்டும் காணாத உன்  போக்கில் , உண்டு உறங்க மறக்கிறேன் நான் ! உன் உணர்வு பரிமாற்ற மறுப்பில் என் உயிர் வலியை - நான் எப்படி உணர்த்த ? மீண்டும் ஒருமுறை  வாய்ப்பு கொடு , உன்னோடு வாழ அல்ல ! நாம் வாழ்ந்த வாழ்வின் அர்த்தம் என்ன என்று கேட்க !
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !  
யாகப் பூக்கள் ... அழாதேடா செல்லம் ! இன்னுமொரு முத்தம் ! அதோ கேளு மணிச் சத்தம் ! மத்தியானம்           வர்றேண்டா ! மடியில           வச்சிக்கிறேண்டா ! படிச்சி களைச்ச           பச்சப் புள்ளைக்கு ! பால் சோறு           தர்றேண்டா ! என்று சொன்ன அம்மா பேச்சைக் கேட்டு, நடையில் வேகம் தளர விட்டு, திரும்பி திரும்பி பார்த்து விட்டு, பிஞ்சுக் கையை அசைத்து விட்டு, உள்ளே போன பிள்ளை கண்டு, கடந்து சென்றால் கணத்த இதயத்தில் தாய் ! நேரம் மெல்லச் செல்லச் செல்ல, மூக்கில் புகையும் ஏற ஏற, இருமி இருமிக் களைத்த பிள்ளை, " ம்மா ... ம்மா ... " எங்கே நீ போனாயோ ? என்னைத்தான் விட்டு விட்டு ! கண்ணுந்தான் எரிச்சலாச்சே ! காரணந்தான் நெருப்பாச்சே ! கதறல்கள் காலியாச்சே ! கைப்பிடித்த தோழியுந்தான் கரித் தூசியாச்சே ! இதோ வர்றேன்னு போனவளே ! சொல்லக் கூட நேரமில்லை ! தீப்பசிக்கு தின்னு தீக்க, எந்தேகம் கிடைச்சிருச்சே ! எங்கேம்மா நீ போன .....
காலத்தை வென்றவள்  உன் விழிகள் கொய்த, என் கடந்த காலத்தைக் கொடுத்து விடு ! உன் வார்த்தைகள் விழுங்கிய , என் வருங்காலத்தைக் கொடுத்து விடு ! உன் சிரிப்பு சீரழித்துக் கொண்டிருக்கும், நிகழ்  காலத்தைக் கொடுத்து விடு ! எனது முக்காலத்தையும் வென்றவள் ! முழுங்கி விட்டு முனகல் வேறு, நான் முட்டாள் என்று ! எக்காலத்திலுமின்றி எக்காளமாயிருக்கிறேன், எப்பொழுதும் என்னெதிரில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் !
மனதை எழுப்பு  நினைவுகளைக் கொண்டு  நெஞ்சில் உழுதது போதும் ! விழிகளைக் கொண்டு  விடியும்வரை அழுதது போதும் ! நினைவுகளால்  நிரம்பும் மனம்  குமுறிக் குமுறிக்  கொப்பளிக்கும் ! வஞ்சொற்களை  வாங்கிய மனம், வதை பட்டு  வடு பட்டு  வாடி நிற்கும் ! நினைவுகள்  நெஞ்சின் நிழல்கள், நிஜமல்ல ! நினைவுகள்  செயல்களின்  சேமிப்புகள்  நிரந்தரமல்ல ! உருவமில்லா  வார்த்தைகளுக்கு  உயிர் கொடுத்து, உள்ளத்தில்  சேமித்து  - உன்னை  ஊனமாக்கியது போதும் ! எழுச்சிமிக்க  எண்ணகளால், மனதை  எழுப்புங்கள் ! ஏணி  போன்ற  எதிர் காலத்தை நம்  எதிரில் வைக்கும் ! எண்ணங்களை  உற்று நோக்கு ! உயிர் கொடு  உன்னை அறிவாய் ! உறுதி பிறக்கும் ! இன்னல் இல்லை  இறுதி வரை !
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...