Skip to main content

அர்த்தமென்ன ?

உன்
உணர்வுகளோடும்
உதிரத்தோடும்
கலந்த என்னை ,

உற்ற தோழி
சொன்னாலென்று ,

உள்ளத்திலிருந்து
எடுத்தெறிந்து விட்டாய் 
என்னை ...

எதிரெதிரேப் பார்த்தாலும் ,

உன்
பத்ரகாளிப்  பார்வையில்
பஸ்பமாகிறேன் நான் !

கண்டும் காணாத
உன்  போக்கில் ,

உண்டு உறங்க
மறக்கிறேன் நான் !

உன்
உணர்வு பரிமாற்ற
மறுப்பில்

என்
உயிர் வலியை - நான்
எப்படி உணர்த்த ?

மீண்டும்
ஒருமுறை 
வாய்ப்பு கொடு ,

உன்னோடு
வாழ அல்ல !

நாம்
வாழ்ந்த வாழ்வின்
அர்த்தம் என்ன
என்று கேட்க !



Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !