Skip to main content

யாகப் பூக்கள் ...


அழாதேடா
செல்லம் !

இன்னுமொரு
முத்தம் !

அதோ
கேளு மணிச்
சத்தம் !

மத்தியானம்
          வர்றேண்டா !

மடியில
          வச்சிக்கிறேண்டா !

படிச்சி களைச்ச
          பச்சப் புள்ளைக்கு !

பால் சோறு
          தர்றேண்டா !

என்று
சொன்ன அம்மா
பேச்சைக் கேட்டு,

நடையில்
வேகம்
தளர விட்டு,

திரும்பி
திரும்பி
பார்த்து விட்டு,

பிஞ்சுக்
கையை
அசைத்து விட்டு,

உள்ளே
போன
பிள்ளை கண்டு,

கடந்து
சென்றால் கணத்த
இதயத்தில் தாய் !

நேரம்
மெல்லச்
செல்லச் செல்ல,

மூக்கில்
புகையும்
ஏற ஏற,

இருமி
இருமிக்
களைத்த பிள்ளை,

" ம்மா ... ம்மா ... "

எங்கே
நீ போனாயோ ?

என்னைத்தான்
விட்டு விட்டு !

கண்ணுந்தான்
எரிச்சலாச்சே !

காரணந்தான்
நெருப்பாச்சே !

கதறல்கள்
காலியாச்சே !

கைப்பிடித்த
தோழியுந்தான்
கரித் தூசியாச்சே !

இதோ
வர்றேன்னு
போனவளே !

சொல்லக்
கூட
நேரமில்லை !

தீப்பசிக்கு
தின்னு தீக்க,

எந்தேகம்
கிடைச்சிருச்சே !

எங்கேம்மா
நீ
போன ...

எனைத்
தீயில்
வேக விட்டு !

என்
உடம்பு
சுடுதம்மா !

சுட்டுச்
சுட்டுக்
கொதிக்குதம்மா !

கொதிச்ச
உடம்பு
கொப்புளமாச்சே !

கொப்புள
உடம்பு
விறகாச்சே !

இந்த
விறக
இன்னும்  எறிக்க,

எதுக்கு
இத்தனை
விறகு அடுக்கு !

நீ
சொன்னபடி
கேட்டுக்கறேன் !

நீ
சொன்ன வேலை
செஞ்சு தர்றேன் !

வேண்டாம்மா ...
வேண்டாம்மா ...

எனக்கு
இன்னுமொரு
கூரைப் பள்ளிக்கூடம் !






Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !