Skip to main content

நீதான்னு ...


காஞ்சிபுரம் கருவாச்சி,
          பார்த்து ரொம்ப நாளாச்சி,

கோபப்படும் குட்டச்சி,
          கோவிச்சிப் போனா என்னாச்சி,

நானும் இனி உங்கட்சி,
          வேணாமடி அழுகாச்சி,

கண்ண உருட்டி காமிச்சி - நீ
          சொன்ன காதல் என்னாச்சி,

நல்ல காலம் வந்தாச்சி,
          நாலு காசும் பார்த்தாச்சி,

பந்தக் காலும் போட்டாச்சி,
          பத்துப் பேரும் வந்தாச்சி,

ஊர் மயங்கி நின்னுருச்சி,
          மணப் பொண்ணா உன்ன பாத்திருச்சி,

கையி ரெண்டும் கோர்த்தாச்சி,
          கழுத்துல தாலி ஏறிடுச்சி,

படுக்கையும் விரிச்சாச்சி,
          பன்னீரும் தெளிச்சாச்சி,

அதுக்குள்ள !
          சூரியந்தான் வந்திருச்சி,

முகத்துல தான் சுட்டுருச்சி,
          கண் முழிச்சி பார்த்தாக்க !

கனவுன்னு ஆயிருச்சி,
          கனவாகிப் போனதால

கண்ணீரு கொட்டிருச்சி,
          நெஞ்சுக் குழி அடிச்சிக்கிச்சு,

எனக்கு
          நீதான்னு சொல்லிருச்சி !


Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !