Skip to main content

இன்னொரு அறிமுகம்

அட !
எங்கேயோ பார்த்த முகம் 
இவனென்று 
எண்ணத் தோன்றுகிறதா ?

எப்போதோ 
சுவைத்த இதயத்தின் 
இனிமை 
இப்போது உன் 
நினைவில் வருகின்றதா ?

உன் 
பத்தினிச் சிரிப்பில் 
பற்றி எரிந்து,
சத்தியமாய்ச் 
சாம்பலாகிப் போன, என் 
இதயத் துகள்களை 
நுகர முடிகிறதா ?

கள்ளிப்பால் குடித்த
குழந்தை போல், உன் 
காதலிப்பால் 
கரைந்த, என் 
உயிரின் கதறல் 
கேட்கிறதா ?

நான் தானடி!
நீ சிதறிய 
பார்வையில் சிக்கியவர்களில்
சீனியர் நான் !

என் வாழ்க்கை
உன்னோடு என்று, நீ
உளறிய வார்த்தைகளில்
உருகியவன் நான் !

உன்
ஞாபகங்களில்
ஞானியானவன் நான் !

பொய்களைக் கடந்து
மெய்களை மறந்து
எதையும் நம்ப
மறுப்பவன் நான் !

முன்னாளில் உன்
காதலனாய்,
இந்நாளில், என்
முகவரி
தொலைத்தவனாய் ...

அட !
எங்கேயோ
பார்த்த முகம்
இவனென்று  இப்போது
தெரிகிறதா ?





Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !