Skip to main content

மனதை எழுப்பு 


நினைவுகளைக் கொண்டு 
நெஞ்சில் உழுதது போதும் !

விழிகளைக் கொண்டு 
விடியும்வரை அழுதது போதும் !

நினைவுகளால் 
நிரம்பும் மனம் 
குமுறிக் குமுறிக் 
கொப்பளிக்கும் !

வஞ்சொற்களை 
வாங்கிய மனம்,

வதை பட்டு 
வடு பட்டு 
வாடி நிற்கும் !

நினைவுகள் 
நெஞ்சின் நிழல்கள்,
நிஜமல்ல !

நினைவுகள் 
செயல்களின் 
சேமிப்புகள் 
நிரந்தரமல்ல !

உருவமில்லா 
வார்த்தைகளுக்கு 
உயிர் கொடுத்து,

உள்ளத்தில் 
சேமித்து  - உன்னை 
ஊனமாக்கியது போதும் !

எழுச்சிமிக்க 
எண்ணகளால்,

மனதை 
எழுப்புங்கள் !

ஏணி  போன்ற 
எதிர் காலத்தை நம் 
எதிரில் வைக்கும் !

எண்ணங்களை 
உற்று நோக்கு !

உயிர் கொடு 
உன்னை அறிவாய் !
உறுதி பிறக்கும் !

இன்னல் இல்லை 
இறுதி வரை !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !