Skip to main content

ஜனிக்கும் ... 


நீ செய்த
கன்னிச் சேவைக்குக்
கடவுள் கொடுத்த
கருணைப் பரிசு,

எனக்கு
பத்து மாதச் சிறைவாசம்
உன்
கருச் சிறைக்குள் !

சிறைக்குள்
நான்
செய்த சித்ரவதை
சகிக்க முடியவில்லை
போலும்
 உன்னால் !

சிந்தித்தாய்
உன்
மனதுக்குள் !

சிதைந்து விட்டேன்
உன்
கருவுக்குள் !
கூழ் கூழாக !

எல்லோர்க்கும்
சந்ததித் தொட்டில் ,

எனக்கு
மட்டும் - அது
சவத் தொட்டிலா ?

உனக்கென்ன
ஒருமுறை
சிறுநீர்
கழிப்பது போல,

என்
ஒரு ஜென்மத்தைக்
கழித்துவிட்டாய்
காசுக்காக !

காசுதான்
உனக்கு
கடவுளென்றால்,

கைககளை
நம்பி
உழை !

கருப்பையை
மூலதனமாக்காதே !

இது
 உன் மனம்
இரங்கச் சொல்லும்
மன்றாட்டு அல்ல !

உன்
மடியில் மலர்ந்த
மழலையின்
மரண ஓலம் !

நொடிக்கு
நொடி
ஜனிக்கும் - உன்
நினைவுகளில் ...






Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !