Skip to main content

நிச்சயமாய் நீயும் ஒரு ...

நிச்சயமாய் எனக்கு 
நீயும் ஒரு ...
எப்போதோ என்னைப் 
பார்த்தாய் !
அப்போதே உன்னை 
மறைத்தாய் !


பார்வைகளால் எனக்குள் 
பயணித்தாய் !

வார்த்தைகளால் என் வயது 
குறைத்தாய் !

என் சோகங்கங்களில் நீ
அழுதாய் !

என் சுகங்களை மட்டுமே நீ 
தொழுதாய் !

தொலைபேசி எண்களில்  
தொலைந்தாய் !

தொல்லை கொடுத்தாலும், என்னை 
மன்னித்தாய் !

சாலையோர சந்திப்பில் 
சாதித்தாய் !

மாலையிலும் உன் பணி 
தொடர்ந்தாய் !

என் நினைவையே உன் 
உணவாய் எடுத்தாய் !

அதனையே எனக்கும் 
திரும்பக் கொடுத்தாய் !

என்றும் உன் மடியில் 
நானோர் குழந்தையாய் !

ஆதலால் 
நிச்சயம் எனக்கு 
நீயும் ஓர் தாய் !

அசைவக்காரன்  தான் நான் 
அதற்காக 
என் பசிக்கு 
உன் தசைகளை 
வேட்டையாடுபவன் அல்ல !

உலர்ந்த நம்பிக்கையில் 
உறவுகள் ஒட்டாது 
உணர்வுகளும் புரியாது !

ஆனால் 
ஒன்று மட்டும் உறுதி !

இறுதி என்பது 
இல்லை இனி என் 
இதயத்தில் உன் 
நினைவுகளுக்கு !




Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !