Skip to main content

நன்றிக் கடன் 


நான் சுவாசித்த 
என் பெண் மனமே !
உன்னால் 
வஞ்சிக்கப்பட்ட இதயம் 
ஒன்று 
வாழத் துடிக்கிறது !

உன்னால் 
அனாதையாக்கப்பட்ட என் 
ஆழ்மனம் - இன்று 
ஆளத் துடிக்கிறது !

உன்னால் 
கைவிடப்பட்ட என் 
கனவுகள் - இன்று 
முற்றுகையிடப்படுகிறது !

உன்னால் 
உழன்று கொண்டிருந்த 
என் வாழ்க்கைச் சக்கரம் 
வெற்றி ஓட்டத்திற்கான 
வரம் பெற்றிருக்கிறது !
எப்படி தெரியுமா ?
எனக்குத் திருமணம் 
அய்யோ பாவம் 
யார் அந்த மங்கை ?
என் மனதிற்கு 
ஈடு செய்வாளா ?

ஏனெனில் அவள் 
எனக்காய் 
தினமும் அழ வேண்டும் !

எனக்காய் 
தினமும் குமுற வேண்டும் !
எனக்காய் 
தினமும் வருந்த வேண்டும் !

எனக்காய் 
தினமும் என்னோடு 
சண்டையிட வேண்டும் !

எனக்காய் 
தினமும் என்னால் 
பித்துப் பிடித்தவள் போல் 
சத்தியமாக மாற வேண்டும் !

எனக்காய் 
எப்போதும் என்னை 
எதிர் பார்த்திருக்க வேண்டும் !

எனக்காய் 
மனதுக்குள் 
கதறிக் கரைய வேண்டும் !

எனக்காய் 
நொடிப் பிரிவும் 
முடியாத செயலாய் 
முனக வேண்டும் !
இவை அனைத்தும் 
சுய நலமில்லை 
பழிவாங்கும் 
படலமும் இல்லை - எனது 
பாசப் பகிர்ந்தளிப்பில் 
என் பத்தினியின் 
பரவச நிலைகள் !
என் அன்பின் 
ஊற்றுகள் 
அனைத்தும் 
அடங்கும் வேளையில்,
மீண்டும் இதே 
மண்ணில் நான் 
கருவாக வேண்டும் !
அதையும் அவளே 
தாங்க வேண்டும் !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !