Skip to main content

சிரிக்கிறேன்

கொஞ்ச நாள் 
பழக்கம் 
கொண்டு வந்த 
வழக்கம் 
எதிரே பார்த்தால் 
யதார்த்தமாய் 
சிரிப்போமென்று !

எத்தனையோ முறை 
உன் எதிரில் நான் 
உன்னைக் 
கடக்கும் பொழுது 
சிரித்தாய் ,
நானும் சிரித்திருக்கிறேன் !

கை அசைத்தாய்,
நானும் 
கை அசைத்திருக்கிறேன் !

'நில்' என்று 
சைகை செய்வாய் 
நானும் 
நின்றிருக்கிறேன் !

'பேசு' என்று 
கண்களால் கெஞ்சுவாய் !
நானும் 
கொலையுண்டிருக்கிறேன் !

"என் இறுதிவரை 
என் கண்களுக்குள் 
நீ தான் 
நிறைந்திருக்க வேண்டும் "
என்றாய் !
பயந்தேன்,
பதறினேன்,
பதில் சொல்லி 
அவகாசம் கேட்டேன் !

உன் பூமுகம் கண்ணீர்ப் 
பொய்கையில் 
மூழ்குவது 
சகிக்காமல் 
கிளம்பினேன் !

மறுநாள் 
இதோ தூரத்திலே 
என்னைப் 
பார்த்து விட்டாய் !

என்னுள் நீ 
உதிர்த்த 
உணர்வுகளுக்கு எல்லாம் 
"உயிர் கொடு"
என்று 
உன்னிடம் 
கேட்க வந்தேன் !

ஆனால் உன் 
கண்களில் எனைப் 
பார்த்ததும் 
ஒளி விடும் 
பிரகாசம் இல்லை !

முகத்தில் எந்தச் 
சலனமும் இல்லை !

கூப்பிடலாமா என
நினைக்கும் போது 
கண்டும் காணாமல் 
உன் கண்கள் 
உன் முகத்தை 
வேறு பக்கம் 
திருப்பியதை எண்ணிச் 
சிரித்தேன் ! 

கானலாய் இருந்த 
உணர்வுகளுக்கெல்லாம் 
நீ தான் காரணம் 
என நான் 
நினைத்ததை எண்ணிச் 
சிரிக்கிறேன் ! சிரிக்கிறேன் !

நீ ஊட்டிய 
உணர்வுகள் எல்லாம் 
உண்மை என்று 
உயிர் வளர்த்த இந்த 
உடலை எண்ணிச் 
சிரிக்கிறேன் !

இந்தப்  பாதையில், என் 
இதயம் பயணிப்பது 
இதுவே இறுதிமுறை என 
முடிவு கட்டிச் சிரிக்கிறேன் !


Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !