Skip to main content

நாளை 

சிந்தனையைச் 
சீரழிக்கும் 
சிரிப்புக்குச் சொந்தக்காரி !

வெண்கடலில் 
கரு முத்தைக் 
காட்டி மிரட்டும் 
கெட்டிக்காரி !

கனலாய் வார்த்தை 
உமிழ்ந்து, என் 
கண்ணீரில் தாகம் 
தீர்க்கும் உளவுக்காரி !

என் 
ஆன்மாவை 
அமைதியாய் 
உறிஞ்சிய உரிமைக்காரி !

வாழ்வில் 
சூரியனாய்  எழுந்தவனை 
சருகாக்கி சங்கடப்படுத்திய 
சாகசக்காரி !

என் இதயத்தை 
இரு கூறாக்கி, நீ 
இட்ட நெருப்பு 
இனி எரியும் 
நாளைமுதல் உனக்குள் !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !