Skip to main content

எங்களால் ...

உறங்காத விழிகளால் 
ஊமை மொழி பேசி, இரு 
உள்ளங்கள் கசிந்துருகி,
உண்மையான  நேசம் 
உறுதிப்படும் போது 
ஊனமாக்கப்படுகிறது  ஜாதி !

தாயை மறந்து 
தாரத்தை மறந்து 
தன் பிள்ளையை மறந்து 
தன்னலத்தையும்  மறந்து 
தாய்நாடு காக்க 
தளராத  உள்ளங்கள் 
இணையும் போது 
இறந்து விடுகிறது ஜாதி !

குறிஞ்சி மலராய் பூத்து 
நெஞ்சு  நெகிழ 
கொஞ்சி விளையாடும் 
பிஞ்சு உள்ளங்கள் 
ஒன்றினையும் போது 
கொன்று அழிக்கப்படுகிறது ஜாதி !

ஊமையாய் இருந்து 
உயிர் பறித்தும், 
நாவில் நடனமாடி 
நாட்டை தொலைத்தும்,
கையில் ஒரு கருவியாகி 
காண்போரைக் கொன்றும்,
யுத்தங்கள் பல கண்டு 
ரத்தக்கறை படிந்த ஜாதி,
இமையத்துக்கப்பால் 
எடுத்தெறியப்படும் 
இனி எங்களால் !


 

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !