Skip to main content

நன்றி

என் கல்லறைக்கு 
வழிகாட்டிய, உன்
விழிகளுக்கு  - நன்றி !

சின்னஞ் சிறிய வார்த்தையால் 
நெஞ்சில் 
சிவப்பு நீர் 
வெளி நடப்பு செய்யாமல் 
சிலுவை அறைந்தாய் - நன்றி !

உணர்வுகளைச்  சாகடித்து என் 
உயிருக்குள் கருவானாய் - நன்றி !

உள்ளம் முழுக்க 
பள்ளம் தோண்டி அமர்ந்து 
என் கண் முன்னே 
கலைந்து போனாய் - நன்றி !

காத்திருந்து உனைக் 
கண்ட கண்கள் 
கண்ணீரால் கழுவிக் 
கரைத்தாய் - நன்றி !

உன் வளையொலியில் 
என் வாழ்வை ஒளித்தாய் - நன்றி !

எழுச்சிமிக்க இளைஞன்
நான் என
எனக்குள் நீ காட்டிய
பாதைக்கு - நன்றி !

ஒரே ஒரு முறை மட்டும்
உன்னைச் சந்திப்பேன் !

உயர்ந்த பிறகு நீ
உணர்த்திய
உயரத்தை நான்
அடைந்த பிறகு - நன்றி !


Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !