Skip to main content

கட்டிப் போடு 

உன் 
    நாவைக்  கட்டிப் போடு !
உணர்வுகளையும்,
    உன்னையும் சுமக்கும் 
என் நெஞ்சில், நீ 
    உமிழ்ந்த வார்த்தைகள் 
உதிரம் கொட்டச் செய்கிறது !

என் 
    ஆழ்மனதில்  நீ 
அடித்த ஆணி வார்த்தைகள்,
    தூக்கத்தின் ஆழத்தையும் 
துக்கப் படுத்துகின்றன !
உன் 
    நாவைக் கட்டிப் போடு !

உன் 
ஒவ்வொரு பார்வையிலும் 
நான் பிறக்கிறேன் !
உன்
ஒவ்வொரு வார்த்தையிலும் 
நான் இருக்கிறேன் !
எனக்கு 
பிறக்க மட்டுமே ஆசை 
சிறப்பாய் உனக்காக மட்டும் !
உன் 
வார்த்தைகளைத் தாங்க 
வலுவில்லை 
என் மனதில்,
ஆதலால் உன் 
மௌனத்தின் கூக்குரல் 
ஒலிக்கும் எப்போதும் !


Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !