Skip to main content

அறுவடை நாள் 


அப்போதே
எனக்குத்
தெரியவில்லை !

உன்
நெடுங்கூந்தல்
நெருங்கி,

கழுத்தினில்
கவிழ்ந்து முகம்
புதைக்கும் போது
தெரியவில்லை
எனக்கு !

உன்
தசையாட்டத்தில்,

என்
விசையிழந்து,

சுகம்
பெரும் பொழுது
சுத்தமாய்த் தெரியவில்லை
எனக்கு  !

ஆனால்
இப்பொழுது
திமிறிய  - என்
தோள்களுக்கிடையில்,

திறந்த - என்
மார்பில்
எலும்புகள் மட்டும்
கூடு கட்டி
குவிந்த நிலையில் !

மேகத்தை
இழந்த
வானத்தைப் போல,

தசையில்லா
என்
தேகத்தில்,

தளர்ந்த
நரம்புகள்
அறுந்து போன
கயிறாய்
ஆடிய நிலையில் !

கறுத்துச்
சிவந்த - என்
கண்கள்,

கவிழ்க்கப்பட்ட
விளக்காய்
ஒளியிழந்த
நிலையில் !

இப்பொழுது
புரிகிறது
எனக்கு !

தாய்
எனக்கு
கொடுத்ததை
தாரத்திடம் பகிராமல்
தாசியிடம் பகிர்ந்ததற்க்கு !

இதோ !
என்
ஆன்மாவின்
அறுவடை நாள்
அதிக தூரமில்லை !







Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !