Skip to main content

பெண்மை 


உன்
பெண்மையின்
மென்மை
கண்டு தானே,

உன்னை
மணம் முடித்தேன் !

இப்போது
மட்டும்
வன்மையை
வரவேற்கிறாயே !

காதலனாய்
இருந்த போது,

கணவனாய்ப்
போற்றினாய் !

கணவனாய்
இருக்கும் போது,

கடமைக்குக்
காலந் தள்ளுகிறாய் !

மனைவி என்ற
மந்திரச் சொல்லிலிருந்து ,

என்னை
நீ
மீட்டுவதில் ,

எனக்கு
மகிழ்ச்சியில்லை !

மறுபடியும்
நீ
என்
காதலியாகிவிடு !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !