Skip to main content

பலி ...


அண்ணனும்
       அழிக்கப்பட்டான் !

தம்பியும்
தாறுமாறாய்க்
கிழித்தெறியப்பட்டான் !

தங்கையின் முடிவும்
பிடி சாம்பலாய்
காற்றில் கரைந்தது !

குழந்தைகளோ !
குற்றுயிரும்
குறை உயிருமாய்
குதறப் பட்டார்கள் ...

மனைவியோ !
மல்லாந்த நிலையில்
மரணத்தைப்
பிரசவத்திருந்தாள் ...

தாய் தந்தையரோ !
தடுமாற்றத்தில்
தன்னிலை மறந்து
கிடந்தார்கள் ...

இந்திய தேசத்தின்
இன வெறியில்
இன்றைய பலி
என் குடும்பம் !
நாளை ...





Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !