Skip to main content

அஞ்சலி 

[ காதலர் தினக் கவிதை ]

என் இதயத்தை 
எனக்கு அறிமுகப்படுத்தியவனளுக்கு,
ஏங்கிக் கிடந்த 
என் எண்ணங்களை 
எழுத்துச் சிதறல்கள் கொண்டு 
ஏணி அமைத்திருக்கிறேன் !
முடிந்தால் 
ஏறி வந்து 
என்னைப் புரிந்து கொள் !

மழைத்துளிக்குப் பின் 
மண் வாசனை 
மலருக்குப் பின் 
மகரந்த வாசனை,
உன் பின் 
என் யோசனை 
என்றாவது வந்திருக்கிறதா ?
நீ ஏன்  வந்தாய் ?
என் பின் 

கரிசல் காடு காத்திருக்கும் 
கன மழைக்கு,
கயவன் நான் 
காத்திருக்கிறேனா ?
என்றாவது உனக்கு !
நீ ஏன் 
காத்திருந்தாய் எனக்கு !

உன் பரிவு 
உன் பாசம் 
உன் காத்திருப்புகள் 
உன் எதிர்பார்ப்புகள் 
உன் சமாளிப்புகள் 
உன்னுடைய 
சின்னச் சின்னப்  பொய்கள்,
சின்னச் சின்ன உரிமை மீறல்கள்,
சின்னச் சின்ன சேட்டைகள்,
என்று எல்லாம் சேர்ந்து,
உனக்காகவே 
உருவாக்கப்பட்டவன் நான் 
என்ற நினைப்பை 
எனக்குள் ஏனடி ஊட்டினாய் ?

என் இதயம் 
இப்போது, உன் 
உயிர் சுமக்கும் 
கருவறை !
உன் நினைவுகளைத் 
தாங்கும் கல்லறை !

கனவாகிப் போன 
உணர்ச்சிகளுக்கு 
காதலர் தினத்தில் 
இறுதி அஞ்சலி !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !