Skip to main content

நினைவுகளுக்காக ...


என்
நெஞ்சுக்குழியை
வானமாய்த் தோண்டி,

உன்
சுடும் பார்வைகளை
கடும் பாறைகளாய்
இட்டு,

என்
கண்ணீரைத்
தண்ணீராய் நிரப்பி
உறுதியாய்,


என்
உள்ளத்தில்
எழுந்ததடி ,

உன்
கல்லறையின்
அஸ்திவாரம் !

நான்
கண்ட கனவுகளை
நான்கு பக்கச்
சுவர்களாக்கி,

கறுப்பு
உனக்கு
பிடிக்குமென்பதால் !

இரவையேத்
தரையாக்கி,

தென்றலையே
திரைச் சீலைகளாக்கி
இருக்கிறேன் !

என்
கூரிய புருவத்தையே
கூரையாக்கி,

என்
விழிகளையே
விளக்குகளாக்கி
இருக்கிறேன் !

உன்
விழிகளின்
வெளிச்சத்தில்,

என்
இதயத்தைக்
கொளுத்தியிருக்கிறேன்,
நறுமணத்திற்காக !

முகப்பில்
உன் உருவத்தை,

என்
உதிரத்தால்
தீட்டியிருக்கிறேன் !

என்
உயிரையே
அதற்குக்
காவலாக்கியிருக்கிறேன் !

என்
மரணம்
வரை பயணிக்கும்,

உன்
நினைவுகளின்
நீண்ட
உறக்கத்திற்கு,

நான்
எழுப்பிய
கல்லறை
இது !

Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !