Skip to main content

மாசானவள்

ஈழத்தில் பிறந்த 
ஈனப் பிறவி நான் !

தமிழர் பிரச்சனையில்
தாள அறுக்கப்பட்டு 
தவிக்கும் குழந்தையோடு 
அகதிப் போர்வைக்குள் 
அழுத்தப்பட்டு இந்தச் 
சகதிக்குள் தள்ளப் பட்டவள் !

வேளைக்கு ஒரு 
சேலை அணியவோ,
கழுத்து நிறைய 
கண் கூசும் நகைகள் 
அணியவோ,
உறவுகளைத் துறந்த 
ஆடம்பர வாழ்வில் 
ஆனந்தம் காணவோ,
இதற்குள் விழவில்லை நான் !

அகதிப் பொறுப்பாளனின் 
அகம் பாவத்தினால்,
பருந்து  பறித்துச் சென்ற 
கோழி குஞ்சு போல்,
பறிக்கப்பட்ட என் குழந்தை,
பயமுறுத்தப் பட்டது, அது 
கொன்று விடப்படுமென்று !

வாழ்வு எனக்கு 
எவ்வளவு தூரமோ 
அவ்வளவு தூரம் தான் 
என் மரணத்திற்கும் 
என்று நினைத்துக் கொண்டேன் 
பல முறை முயற்சித்தும் 
முடிவில் மரணம் 
எனக்கு மறுக்கப்பட்ட ஒன்று என்று !

கண்ணுக்கு எட்டாத தூரத்தில் 
காக்கப் படுகிறது என் 
குழந்தையென்று
அவன் செய்த சத்தியங்களில் 
என் சரித்திரம் மாறுகிறது !

மாத வாடகையானேன்,
நாளுக்கொரு விலை பேசப்பட்டேன் 
மணிக் கணக்கில் 
பணம் பண்ண 
பயன்படுத்தப்பட்டேன் !

என் உடலில் 
உழைத்தவர்கள் 
என் உணர்வுகளை 
உமிழ்ந்தார்கள் !

பலவித வழக்கில் 
பல  நாட்கள்
சிறை செல்ல 
பெருத்த வாய்ப்புக் 
கிடைக்கும் போதெல்லாம்,
ஓய்வெடுக்கலாம் என்று 
நிம்மதி பெருமூச்சு விடுவேன் !

ஆனால் 
அவிழ்க்கப்பட்ட என் 
ஆடைகளைக் கொண்டு,
சட்டம் மூடப்பட்டிருக்கும் !

என் 
உழைப்பு தொடர்ந்து 
கொண்டிருக்கும்,
இலவசமாகவே !

உடல்வலி 
ஊறு செய்யும்போது,
உற்சாகப் பானத்தால் 
நிரப்பப்படுவேன் !

பகல் இரவாய் 
பண்ணிய தவறுகளுக்கு,
பால்வினை நோய் 
பரிசாய் வந்தது !

மாத்திரைகளை விழுங்கி 
மயங்கிய நிலையில் 
மரண வாசலில் 
மிதந்து கொண்டிருக்கிறேன் !

மங்கையர் குலத்தில்
நான் ஒரு 
மாசு என்று 
எண்ணிக் கொண்டிருக்கும் போதே,
விபரீதமான 
விபசார வாழ்வு 
விடை பெறுகிறது 
என்னிடமிருந்து !


Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !