Skip to main content

பெண் மனம்

எவனையும் பார்த்து 
எதுவும் தோன்றவில்லை 
இதுவரை எனக்கு !

உங்களைப் பார்த்த 
பின்பு தான் 
ஆசை என்பதற்கு 
அர்த்தம் புரிந்தது !

நீ பேசும் 
பொழுது தான் 
ஸ்நேகம் 
விளங்கியது !

நீ 
பழகும் பொழுதுதான் 
பரிவு புலப்பட்டது !

நீ 
விலகும் போது  தான் 
மீண்டும் மீண்டும் 
வேண்டும் 
என்றிருந்தது !

நீ 
நெருங்கும் போது  தான் 
வெட்கம் பிறந்தது !

நீ 
அழைப்பிதழ் தரும் போது  தான் 
என் கனவுகளில் 
கலைந்து  சென்றாய் 
நினைவுகளில் 
நிலைத்து நின்றாய் !

என் 
இருபது வருட 
ஒழுக்கம்,
என்னை விட்டு 
எட்டிச் சென்று,
கேலி செய்கிறது !

உணர்வுச் சிறைக்குள் 
நான் 
உயிர் விடும் போது !
 


Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !