Skip to main content

நெஞ்சினிலே 

பத்து மாதம் கருவுக்குள் 
என்னைப் புதைந்து, இந்த 
பாரதத் தாய்க்கு,
பத்திரமாக என்னை 
அறிமுகப்படுத்திய என் தாயே !
பதறாதே ! இதோ இன்னும் 
இரு தினங்களில் உன்னுடன் !

எல்லை வீரன் இவன்,
தொல்லைகள் இருக்கும் எனத் 
தெரிந்தும் 
கவலைகளின்றி எனை மணந்து,
நாள்தோறும் தெருமுனையில், என் 
வரவுக்காக காத்திருக்கும்  - உன் 
விதி முனைகளுக்கு 
விருந்து வைக்க, அன்பே !
இன்னும் 
இரு தினங்கள் மட்டுமே !

என் முகம் பாராமலே 
வளரும் என் மகனே ! - உன் 
பிஞ்சுப் பாதங்கள் நடக்க, என் 
நெஞ்சினையே கொண்டு வருகிறேன் 
இன்னும் இரு தினங்களில் !

இவ்வாறு 
இமைய மலைச் சாரலில்
கடுங்குளிரில் காற்றையும்
கஷ்டமாக சுவாசித்துக் கொண்டு
தன் கண்களுக்குள் எல்லையைக்
காத்து நின்ற வீரன் ஒருவனின்,
காய்ந்து போன மனம்
எண்ணிக் கொண்டிருந்த வேளையில்,
ஊடுருவல் என்ற பெயரில்
ஓடி வந்த ஒருவனின்
தோட்டாக்களைத் தன் மார்பில்
புதைத்துக் கொண்டு
முதன் முதலில் எல்லையை
மிதித்தவனை, தன் கத்தி
வீசி ,  அவன் இதயத் துடிப்புக்கு
விடுதலை அளித்து, அவனைத்
தாய் மண்ணுக்குக்
காணிக்கையாக்கி
தன் கைகளில்
குருதியேந்தி
எரிந்தவனின் மனம்,
பனியோடு பனியாக, அவன்
உயிர் கரைகின்ற வேளையில்,
தகப்பனை தவறவிட்ட தாயையும்,
தன்னை இழந்த தன் மனைவியையும்,
தன்னலம் மட்டும் விரும்பும்
இந்திய மக்களையும் நினைக்கையில்,
உயிரோட்டம் முடிந்த - அவன்
விழிகளில் துளிகளாய்
நீரோட்டம் !



Comments

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !