Skip to main content

உள்ளத்தில் வை 

மேற்கில் மெல்லச் 
சரியும் சூரியனை
மெழுகாய் உருக்கவும் வேண்டாம் !
வானத்து 
வெள்ளிப் புள்ளிகளை 
சுள்ளிகளாய்ப்  பொறுக்கி 
வெண்ணிலவில் 
குளிர்காயவும் வேண்டாம் !
மிகவும் இன்னல்பட்டு 
மின்னலைப்  பிடித்து 
சன்னல்  கம்பிகளாய் 
பின்னவும் வேண்டாம் !
துடிப்பு மிக்க தூயவனே !
துணிச்சலான இளைஞனே !
உலகில் உன்னை 
உதயமாக்கியவர்களை 
உள்ளத்தில் வை !
ஊனமில்லாத வாழ்வு 
உன்னெதிரில்!

Comments

Post a Comment

Popular posts from this blog

கற்பு ... சாலையோர விபச்சாரத்தின் சரளமான அழைப்புகளில் செத்து மடிகிறது கலாச்சாரத்தின் கற்பு ...
நீங்காதவன்  உருவங்களை ஊடுருவிச் செல்லும் வெள்ளிச்சத்தில் பிறந்தவன் நான் ! உணவு, உடை, உணர்வு, உறக்கம் உறைவிட மற்றவன் நான் ! காடு, மலை கடந்தாலும் களைப்பில்லாதவன் நான் ! வளர்ந்து தேயும் வல்லமை பெற்றவன் நான் ! ஊர் முழுக்க ஊர்ந்து செல்லும் ஊனமில்லாதவன் நான் ! உலகம் இயங்கிய நாள்முதல் உயிரோடிருப்பவன் நான் ! மனித மனங்களில் மறைந்து கிடக்கும் மனசாட்சியின் மறுபிறவி நான் ! எதனை விட்டும் நீங்காதிருப்பவன் நான் ! என் பெயர் நிழல் என்பதால் ...
தினமும் அழகாய்  வந்தாய் அருகில் நின்றாய் ! கண்களால் கொன்றாய் காதலால் தின்றாய் ! பூவெனத் துளிர்த்தாய் உள்ளத்தில் உயிர்த்தாய் ! சொல்லிசை மொழிந்தாய் சொல்லாமல் கரைந்தாய் ! வாவென அழைத்தாய் வந்ததும் மறைந்தாய் மறைவில் சிரித்தாய் ! உன் பிம்பம் மேகமாய் ... என் கண்ணில் நீ மழையாய் ! சொல்லத் துடிக்குது  மனமே ! தரிசனம் அருள்வாய் தினமே !